சொல் பொருள்
குடுவை என்பது ‘வயிறு’ என்னும் பொருளில் கன்னியாகுமரி மாவட்டம் புதூர் வட்டார வழக்காக உள்ளது
குடுவை என்பதற்குப் பதனீர்ப்பெட்டி என்னும் நெல்லை வழக்கும், பூக்குடலை, செப்புக்குடம் என்பனவும் கருதலாம்.
சொல் பொருள் விளக்கம்
குறுகிய வாயையுடைய கலம் குடுவை எனப்படும். குடுவை என்பது ‘வயிறு’ என்னும் பொருளில் கன்னியாகுமரி மாவட்டம் புதூர் வட்டார வழக்காக உள்ளது. குறுகிய குடல் வழியாகப் பெருங்குடல் வயிறு என உணவு செல்வதால் குடுவைப் பொருள் கொள்ள வாய்த்துள்ளது. வைப்புழி (வைக்கும் இடம்) என்றும் வள்ளுவத்தை எண்ணலாம். இனி, குடுவை என்பதற்குப் பதனீர்ப்பெட்டி என்னும் நெல்லை வழக்கும், பூக்குடலை, செப்புக்குடம் என்பனவும் கருதலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்