குட்டம் என்பதன் பொருள்ஆழமான/ஆழம் குறைந்த நீர்நிலை(குளம், கடல்), ஒரு நட்சத்திரத்தின் நான்கு பாகங்களில் ஒரு ஒரு பாகம், பாதம்
1. சொல் பொருள்
(பெ) 1. ஆழமான நீர்நிலை(குளம், கடல்), 2. ஆழம், 3. ஆழம் குறைந்த நீர்நிலை, 4. ஒரு நட்சத்திரத்தின் நான்கு பாகங்களில் ஒரு பாகம், பாதம்
நிலைக்கால் ஊன்றுதற்குரிய பள்ளத்தைக் குட்டம் என்பது கொற்றர் வழக்கம். கொற்றர் = கொத்தர். குட்டம் = சிறு, பள்ளம்
2. சொல் பொருள் விளக்கம்
கொற்றர் = கொத்தர். குட்டம் = சிறு, பள்ளம்; குளம் குட்டை இணைச்சொல் நீர்நிலைக் குட்டம் (ஆழநீர்) பழமையான ஆட்சியுடையது.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
tank, pond, depth, one fourth part of a star
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
செ வரி கயலொடு பச்சிறா பிறழும்
மை இரும் குட்டத்து மகவொடு வழங்கி – பெரும் 270,271
சிவந்த வரியினையுடைய கயல்களோடே பசிய இறாப் பிறழ்ந்துநின்ற,
கரிய பெரிய ஆழமான குளங்களில் பிள்ளைகளோடு நீந்தி,
பெரும் கடல் குட்டத்து புலவு திரை ஓதம் – மது 540
பெரிய கடலின் ஆழ்பகுதியினின்(று வரும்) புலால் நாறும் அலைகளின் எழுச்சி
மேச இராசியில் பொருந்திய கார்த்திகை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில்
நிறைந்த இருளையுடைய பாதி இரவில்
12 இராசிகளில் முதல் இராசி மேசம். 27 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் அசுவினி. எனவே ஒவ்வொரு இராசிக்கும் இரண்டேகால் நட்சத்திரங்கள் பொருந்தும். முதல் இரண்டு நட்சத்திரங்கள் அசுவினி, பரணி. இவை முழுதும் மேச இராசியில் பொருந்தும். அடுத்து வரும் கார்த்திகையில் கால் பங்கு மேச இராசியில் பொருந்தும். ஆடு என்பது மேசம். அழல் என்பது கார்த்திகை. குட்டம் என்பது கார்த்திகையின் முதல் பாதம்.
நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து – சிறு 180
கரை அரும் குட்டம் தமியர் நீந்தி – நற் 144/8
பூ உடை குட்டம் துழவும் துறைவன் – நற் 272/6
துளங்கு இரும் குட்டம் தொலைய வேல் இட்டு – பதி 88/5
பெருநீர் குட்டம் புணையொடு புக்கும் – அகம் 280/9
கடல் குட்டம் போழ்வர் கலவர் படை குட்டம்
பாய்மா உடையான் உடைக்கிற்கும் தோம் இல் – நான்மணி:16/1,2
தவ குட்டம் தன்னுடையான் நீந்தும் அவை குட்டம்
கற்றான் கடந்துவிடும் – நான்மணி:16/3,4
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்