சொல் பொருள்
குட்டு – உள்ளத்துள்ள மறைவுச் செய்தி.
நட்டு – வெளிப்பட்ட விளக்கச் செய்தி.
சொல் பொருள் விளக்கம்
“உன்குட்டு நட்டு எனக்குத் தெரியாதா? என்னிடமே அவிழுக்கிறாயே” என்பது வழக்கு.
“உன் குட்டை உடைக்கட்டுமா?” என்னும் வினாவில் குட்டு என்பது மறைவுச் செய்தியாதல் புலப்படும். நட்டு என்பது நட்டப்பட்டது, வெளிப்பட்டது என்னும் பொருளதாம். நுண்ணறிவு படைத்தவனைக் குட்டு நட்டுத் தெரிந்தவன் என்பது நாட்டுப்புற வழக்கு. நட்டு என்பது நெட்டு என்றும் வழங்கப்படும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்