சொல் பொருள்
குட்டுப்படுதல் – தோல்வியுறல்; இழிவுறல்
சொல் பொருள் விளக்கம்
தவறுக்குத் தரும் தண்டனையாகப் பள்ளிகளில் தரப்படுவது குட்டு. ஆசிரியர் குட்டுதல், பிற மாணவர் குட்டுதல்.தானே குட்டிக் கொள்ளுதல் என மூவகையால் நிகழ்வதுண்டு, குட்டுப்படுதல் குறைவு என எண்ணம் உண்டாகி அதனைத் தவிர்க்க முயலவேண்டும் என்பதே அதன் நோக்கு. குட்டுபவன் தகுதியுடையவனாக இருத்தலாவது வேண்டும் என்னும் நினைவால் ‘குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்’ என்னும் பழமொழி எழுந்தது. இது தோல்விப் பொருளது. இனிக் குட்டுதல் இப்பொருளில் இருந்து இழிவுபடுத்துதல் என்னும் பொருளுக்கு மாறியபோது “குட்டக் குட்டக் குனிபவனும் கோழை; குனியக் குனியக் குட்டுபவனும் கோழை”எனப்பழமொழி எழுந்தது. குட்டுதல் என்பது குட்டுதலால் உண்டாகும் இழிவுப் பொருளுக்கு உண்டாயிற்று.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்