சொல் பொருள்
குத்தல் – விட்டு விட்டு ஓரிடத்து வலித்தல்.
குடைச்சல் – இடைவிடாது குடைந்து அல்லது சுழன்று வலித்தல்.
சொல் பொருள் விளக்கம்
நோவு வகையுள் குத்தல் குடைச்சல் என்பவற்றைக் குறிப்பிடுவர். உலக்கை, கம்பி முதலியவை குத்துதலையும், வண்டு குடைதல் அல்லது துளைத்தலையும் ஒப்பிட்டுப் பார்த்தால் குத்தல் குடைச்சல் பொருள் தெளிவாம். தலைக்குத்து, மூச்சுக் குத்து, என்பவை குத்துக்கள். காது குடைதல், கால் குடைதல் என்பவை குடைவுகள். வட்டமிட்டு நீந்துதலைக் குடைதல் என்பது இலக்கிய வழக்கு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்