சொல் பொருள்
குத்திக்காட்டல் – பழங்குறையை எடுத்தல் கூறல்
சொல் பொருள் விளக்கம்
குத்துக்குக் கத்தி வேண்டும். இக்குத்து கத்தியில்லாக் குத்து. கத்திக்குத்தினும் கடுவலியும் காலமெல்லாம் மாறாத்தனமும் உடையது. எப்பொழுதோ ஒரு தவறு நிகழ்ந்திருக்கும். அதனைக் காலங் காலமாக சொல்லிச் சொல்லிப் புண்படுத்துதல் குத்திக் காட்டலாம். அதன் கடுமையைக் காட்ட ‘ஒருபக்கம் குத்தி ஒருபக்கம் வாங்குவான்’ என்பர். இடித்துரைத்தல் என்பதற்கும், இதற்கும் வேறுபாடு உண்டு. ஆங்குக் காண்க.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்