சொல் பொருள்
(பெ) குத்து வேல்,
குந்தம் என்பதும் குவியல் பொருள் தருதல் சொல்லியல் நெறியதாம்
சொல் பொருள் விளக்கம்
குத்து கருவியுள் ஒன்று குந்தம். “குந்தம் வாள் ஈட்டி” என்பார் கவிமணி. குந்தம் என்னும் சொல் குவியல் என்னும் பொருளில் முதுகுளத்தூர் வட்டார வழக்கில் உள்ளது. ‘உப்புக்குந்தம்’ எனக் கூறப்படும் விளையாட்டும் உண்டு. கும்பல், குப்பை என்பவை போலக் குந்தம் என்பதும் குவியல் பொருள் தருதல் சொல்லியல் நெறியதாம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
short spear
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பூ தலை குந்தம் குத்தி கிடுகு நிரைத்து – முல் 41 பூத்தொழிலைத் தலையிலேயுடைய எறியீட்டிகளை ஊன்றி, கேடயங்களை வரிசையாக வைத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்