Skip to content

சொல் பொருள்

(பெ.அ) பயன்படாமல் காலம் கழிதல்,

சொல் பொருள் விளக்கம்

பயன்படாமல் காலம் கழிதல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

remain unutilised for long

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குமரிமூத்த கூடு ஓங்கு நல் இல் – பெரும் 247

கன்னிமையோடே முதிர்ந்த கூடுகள் உயர்ந்து நின்ற நல்ல இல்லங்களையும்

குமரிமூத்தல் என்பது உபயோகப்படுத்தாமல் காலம்கழிதல். ஒரு கன்னி மணப்பருவம் அடைந்தும்
கணவனைப் பெறாமல் வீணே முதியவள் ஆகிவிடுவதைக் குமரி மூத்தல் என்கிறோம்.

அமரர் கோன் ஆனையின் அருந்துவோர் பெறாமல்
குமரிமூத்த என் பாத்திரம்
என்று மணிமேகலையில் வருவதுவும் இதனை மெய்ப்பிக்கும்.

ஓர் அறுவடையின் போது, அப்போதைக்குத் தேவையானதை வைத்துக்கொண்டு அதிகமாய் இருப்பதை
குதிர் என்னும் சேமிப்புக் கிடங்கில் போட்டு வைப்பார்கள். பின்னர் தேவைப்படும்போது குதிரிலிருந்து
எடுத்துப் பயன்படுத்துவார்கள். அப்படித் தேவைப்படாத அளவுக்குப் புதிய தானியங்கள் வந்துகொண்டே
இருந்தால், குதிருக்குள் இருப்பது அப்படியே நெடுங்காலம் இருக்குமல்லவா! இதனையே
குமரிமூத்த கூடு ஓங்கு நல் இல் என்கிறார் பெரும்பாணாற்றுப்படைப் புலவர்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *