சொல் பொருள்
(வி) 1. குடை, துளையிடு, 2. கல்லில் எழுத்துக்களைப் பொறி,
2. (பெ) இனிமையான ஓசை எழுப்பும் கரிய நிறப்பறவை,
சொல் பொருள் விளக்கம்
குடை, துளையிடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hollow out, tunnel, make a hole, inscribe on a stone, cuckoo
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குன்று குயின்று அன்ன ஓங்கு நிலை வாயில் – நெடு 88 பாறைக்குன்றைக் குடைந்து செதுக்கியதைப் போன்ற கோபுரத்தை (மேலே)உடைய வாயில்களையும் பெயர் பயம் படர தோன்று குயில் எழுத்து – அகம் 297/8 பெயரும் பீடும் விரியத் தோன்றுமாறு பொறித்த எழுத்துக்களையுடைய வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர் – பெரும் 374 வெயில் நுழைந்து அறியாத, குயில் நுழையும் சோலையில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்