சொல் பொருள்
(பெ) 1. தாளிப்பு, 2. தாளித்த புகை,
சொல் பொருள் விளக்கம்
தாளிப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
seasoning with spices
smoke which comes while seasoning
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குவளை உண்கண் குய் புகை கழும – குறு 167/3 குவளை போன்ற மையுண்ட கண்களில் தாளிதப்புகை நிறைய நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும் – நற் 380/1 நெய்யும், தாளிப்புப் புகையும் படிந்து, என் உடம்புடன் அழுக்கடைந்துள்ளது என் ஆடையும்; தோள்களும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்