சொல் பொருள்
(பெ) குடிசை, சிறுகுடில்,
சொல் பொருள் விளக்கம்
குடிசை, சிறுகுடில்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
small hut
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை – அகம் 9/3 நான்கு கழிகளை நட்டு, நாற்புறம் சுவர் அல்லது தடுப்பு எழுப்பி, மேற்கூரையைக் கொண்ட ஓர் அமைப்பு. பெரிய வெயிலை இது தாங்காது. உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை – சிறு 174,175 மிகுகின்ற வெயிலுக்கு (உள் உறைவோர்)வருந்திய வெப்பம் விளங்குகின்ற குடில் ஈச்ச மரத்தின் இலை, வேறு இலைதழைகள், அரிந்த தட்டைகள், நாணற்புல், முள் ஆகியவை கூரையாக வேயப்பெற்றிருக்கும். ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை – பெரும் 88 இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி – மது 310 அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை – அகம் 315/16 இருவி வேய்ந்த குறும் கால் குரம்பை – குறி 153 புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே – குறு 235/5 முண்டகம் வேய்ந்த குறி இறை குரம்பை – நற் 207/2 மிகவும் குறுகலாக இறங்கும் கூரையினை உடையது. குறி இறை குரம்பை பறி உடை முன்றில் – பெரும் 265 இறை என்பது கூரையின் இறக்கம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்