சொல் பொருள்
இது, தக்கலை வட்டாரத்தில் விதை என்னும் பொருளில் வழங்குகின்றது
சொல் பொருள் விளக்கம்
குரு, குருவன், குருத்துவம் என்னும் வழியில் இலக்கிய ஆட்சி பெறும் சொல்லன்று குருச்சி. இது, தக்கலை வட்டாரத்தில் விதை என்னும் பொருளில் வழங்குகின்றது. ஒளி என்னும் பொருள் தருவது குரு. அது தொல்காப்பிய வழியது. விதையை முளைக்க வைத்தால் முளை ஒளியொடு வெளிப்படுதல் கண்கூடு. இதனைக் கொண்டு குருச்சி எனப் பெயரீடு செய்துள்ள வட்டார வழக்கு பொது மக்களும் புலமைப் பெருமக்களை ஒப்பவர் என்னும் எண்ணத்தை உண்டாக்கத் தவறாது. முளையைப் ‘பாவை’ என்னும் பழந்தமிழ் ஆட்சியும் ‘பாவை’ என்பது ‘பார்வை’ வழி வந்தது என்பதும் கருதுக. பயிரின் குருத்தைக் காணின் அதன் ஒளிப்பொருள் வெளிப்படும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்