சொல் பொருள்
(பெ) 1. சந்தனக்கட்டை, 2. வண்டி முதலியவற்றின் அச்சுக்கோக்கும் இடம், 3. கொல்லரின் பற்றுக்குறடு,
வளைவாகவும் பற்றிப் பிடிப்பதாகவும் இருப்பதைக் குறடு என்பர்.
குறடு ‘கடன்’ என்னும் பொருள்தருவது
சொல் பொருள் விளக்கம்
வளைவாகவும் பற்றிப் பிடிப்பதாகவும் இருப்பதைக் குறடு என்பர். பற்றுக்குறடு, பாதக்குறடு என்பவை எடுத்துக்காட்டு. சுருண்டு ஒலிக்கும் வகையால் பெயர்பெற்றது குறட்டை. குறண்டி முள் வளைவினது. இவ்வட்டார வழக்குக் குறடு ‘கடன்’ என்னும் பொருள்தருவது. கடன் கொடுத்தவர் படுத்தும்பாடும், கடன் கொண்டவர் படும் பாடும், அதிலிருந்து மீளமுடியா இறுக்கமும் நெருக்கலும் நோக்கினால் கடனைக் குறடு என்று வழங்கிய படைப்பாளியைப் பாராட்டலாம். சொல்லாலேயே வாழ்வியல் காட்டிய பண்பாடு இது. நெல்லை வட்டார வழக்காகும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sandal wood piece
Axle-box of a cart
Pincers, forceps
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திண் காழ் நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 32,33 திண்ணிய வயிரத்தையுடைய நறிய சந்தனக்கட்டையை உரைத்த பொலிவுள்ள நிறத்தையுடைய குழம்பை கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு – சிறு 252,253 கூரிய சிற்றுளிகள் சென்று செத்திய உருவங்கள் அழுந்தின, வலிமையான, அச்சுக்குடத்தில் (பொருத்திய)ஆரக்கால்களைச் சூழ்ந்த இரும்புப்பட்டையை மேற்புறம் கொண்ட சக்கரத்துடன், கரி குறட்டு இறைஞ்சிய செறி கோள் பைம் குரல் – குறு 198/4 கொல்லர் உலைக் கரியை எடுக்கும் குறடு போல வளைந்த செறிந்த குலைகளையுடைய பசிய கதிர்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்