சொல் பொருள்
(வி) குனி
சொல் பொருள் விளக்கம்
குனி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
stoop, bend low
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அவன் ஆங்கே பாரா குறழா பணியா பொழுது அன்றி யார் இவண் நின்றீர் என கூறி – கலி 65/9-11 அவன் அங்கே என்னைப் பார்த்து, குனிந்து, பணிந்து, “நேரங்கெட்ட நேரத்தில் இங்கு நிற்கின்ற நீர் யார்” என்று கூறி – ‘குறழா’ என்பதற்கு நச். குனிந்து என்று பொருள் கூறினர் என்று தோன்றுகின்றது. இது ஏடெழுதுவோர் பிழையால் குழறா என்பது இவ்வுருப்பெற்றதாகலாம். அல்லது குழறா என்பதே சிவிறி விசிறி ஆனாற்போன்று எழுத்து நிலைமாறி இங்ஙனமாயிற்று எனக் கோடலும் சாலும். பார்த்து அச்சத்தால் குழறி என்பதே பொருத்தமகவும் இருக்கும். நிற்பாள் ஒருத்தியைக் குனிந்து பார்த்தான் என்பதும் பொருந்தாமை உணர்க.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்