சொல் பொருள்
குறுக்கே விழுதல் – தடுத்தல்
சொல் பொருள் விளக்கம்
ஒருவர் ஒரு செயல் மேற்கொண்டு புறப்படுங்கால் அவர் போக்கைத் தடுத்து ‘என் வாக்கைக் கேட்டுவிட்டுப்போ’ என்பதற்கு அடையாளமாக நிறுத்துவதற்குக் குறுக்கே விழுதல் வழக்கம். பேருந்து நிறுத்தம், தொடர் நிறுத்தம், சாலை மறிப்பு,தொழிலக மறிப்பு எல்லாம் இவ்வகைப்படுவனவே. இவ்வழக்கம் குறுக்கே வந்து விழாமலும், ஆள் நேரே கூட வராமலும் கூட எழுத்து வகையாலோ, சொல்வகையாலோ ஏற்படும் குறுக்கீட்டையும் குறுக்கே விழுதலாகக் குறிக்கும் வழக்கு உள்ளது. “குறுக்கே விழுந்து தடுக்காதே ; தடுத்தால் பிறகு பார்” என வஞ்சினம் கூறலும் உண்டு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்