சொல் பொருள்
மருந்தாகப் பயன்படும் மாத்திரைகளைக் குழிசை என்பது நாகர்கோயில் வட்டாரவழக்கு
சொல் பொருள் விளக்கம்
மருந்தாகப் பயன்படும் மாத்திரைகளைக் குழிசை என்பது நாகர்கோயில் வட்டாரவழக்கு. மாத்திரை பெரிதும் உருண்டை வடிவில் இருப்பது. அதனால் முகிழம் என்பார் பாவாணர். முகிழ் என்பது மலரின் மொக்கு (மொட்டு) நிலை. மருந்து இடிக்கும் கல் குழியுள்ளது. அதில் இடித்துச் செய்வதால் – குழிக்கல்லில் இடித்துச் செய்வதால் – குழிசை எனப்பட்டது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்