சொல் பொருள்
குழிமாடு என்பது சுடுகாடு என்னும் பொருளில் மேலூர் வட்டார வழக்கில் உள்ளது
சொல் பொருள் விளக்கம்
குழிமாடு என்பது சுடுகாடு என்னும் பொருளில் மேலூர் வட்டார வழக்கில் உள்ளது. இறந்தாரை அடக்கம் செய்ய, குழி தோண்டுவர் ஆதலால் அது புதைகுழி எனப்படும். இடுகாடு என்பதும் அது. மாடு என்பது பக்கம் என்னும் பொருளது இலக்கிய வழக்கிலும், மக்கள் வழக்கிலும் இடப் பொருள் உண்டு. “மாடு நின்ற மணிமலர்ச்சோலை”; “அரசன் மாடு அணுகினான்” இலக்கிய வழக்கு. “கால்மாடு, தலைமாடு” – மக்கள் வழக்கு. குழிவாசல் என இடுகாட்டை வழங்குதல் ஆண்டிபட்டி வட்டார வழக்கு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்