சொல் பொருள்
குழைதல் – அன்புளதுபோல் நடித்தல்
சொல் பொருள் விளக்கம்
‘சோறு குழைதல்’ ‘மண்குழைத்தல்’ என்பவை வழக்கில் உள்ளவை. நாய் வாலைக் குழைத்தல் கண்கூடு. மரத்தில் குழைகள் எழுந்தும் வீழ்ந்தும் பிரிந்தும் சேர்ந்தும் ஆடும். அவ்வாறு கூத்து ஆடுதல் குழைந்தாடுதல் எனப்படும். இளக்கமாதல், நெகிழ்தல், வளைதல், தழுவி ஆடுதல் என்பனவெல்லாம் குழைதல் பொருளாக அமைந்தன. “என்ன குழைவு பெரிதாக இருக்கிறது; ஏதோ ஆக வேண்டும் போல் இருக்கிறது” என, குழைபவரைக் கண்டு அதனைப் புரிந்தவர்கள் கூறுவதுண்டு. குழைதல் மெய்யன்பால் நிகழ்வது அன்று. பொய்யான நடிப்பு என்பதால்தான் இகழ்ச்சிக்கு உரியதாயிற்று.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்