சொல் பொருள்
கூகம் – மறைவு
சொல் பொருள் விளக்கம்
கூகை என்பதொரு பறவை. அப்பறவை பகலில் வெளிப்படுவது இல்லை. இரவுப் பொழுதிலேயே வெளியே வரும் ; இரை தேடித் தின்னும் ஆதலால் கூகை பகலில் மறைந்தே இருப்பதை அறிந்தவர்கள், மறைத்து வைக்கும் அல்லது மறைவான செய்தியைக் ‘கூகம்’ என்றனர். கூகை போல் மறைந்து கிடக்கும் செய்தி என்பது பொருள். சிலர் தங்கள் மனக் கருத்தை வெளியிடவே மாட்டார். அத்தகையவரைக் கூகமானவர் என்பர். நான் சொல்வது கூகமாக இருக்கட்டும் என்று எச்சரிப்பதும் உண்டு. கூகமாக இருந்து ஊரைக் கெடுத்து விட்டான் என்பது ஒரு சிலர்க்கு ஊரவர் கொடை. கூகை மறைவு, கூகமறைவாகியது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்