சொல் பொருள்
மதுரை நகரம், முகத்துவாரம், நதிகள் ஒன்றோடொன்று கூடும் இடம், கைகூடிவருதல், ஆகிவருதல், கூடல்விழா
சொல் பொருள் விளக்கம்
மதுரை நகரம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
The city of Madurai, mouth of a river, estuary, Confluence of rivers, materialise, come to fruition, festival of koodal
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல் நாள்_அங்காடி நனம் தலை கம்பலை – மது 429,430 மாடத்தால் விளக்கமுற்ற மிக்க புகழையுடைய மதுரையில் நாளங்காடியையுடைய அகன்ற இடத்தில் (எழுந்த)பெரிய ஆரவாரமும் மலி ஓதத்து ஒலி கூடல் தீது நீங்க கடல் ஆடியும் – பட் 98,99 மிகுந்த அலைஆரவாரம் ஒலிக்கும் புகார்முகத்தில், தீவினை போகக் கடலாடியும் செம் குணக்கு ஒழுகும் கலுழி மலிர் நிறை காவிரி அன்றியும் பூ விரி புனல் ஒரு மூன்று உடன் கூடிய கூடல் அனையை – பதி 50/5-7 நேர் கிழக்காக ஓடும் கலங்கலான நிறைந்த வெள்ளத்தையுடைய, காவிரியோடு கூட, பூக்கள் பரந்த வெள்ளத்தையுடைய ஆறுகள் மூன்றும் ஒன்று கூடும் முக்கூடல் போன்றவன் நீ! – மூன்றுடன் கூடிய கூடலைப் பழைய உரைகாரர் “அக் காவிரி தானும், ஆன் பொருநையும், குடவனாறும் என இம் மூன்றும்சேரக்கூடிய கூட்டம்” என்பர்.- ஔ.சு.து.விளக்கம் ஆண்டு செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின் நின் நாடு உள்ளுவர் பரிசிலர் – புறம் 38/16,17 அவ்விண்ணுலகத்து நுகரும் நுகர்ச்சி இவ்விடத்தும் கைகூடுவதால் நின் நாட்டை நினைப்பர் பரிசிலர். கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய புலம் பூத்து புகழ்பு ஆனா கூடலும் உள்ளார்-கொல் – கலி 27/11,12 அணிகளால் அழகுபெற்ற மகளிர் கண்ணுக்கு இனிதாய்த் தோன்றி மகிழ்ச்சியூட்ட, நாடே பொலிவுபெறுகின்ற, புகழ்ந்து முடியாத கூடல்விழாவையும் அவர் நினைத்துப்பாராரோ? – மா.இராச.உரை.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்