சொல் பொருள்
கூடு – வீடு
குடும்பம் – மக்கள்
சொல் பொருள் விளக்கம்
‘கூடும் குடும்பமுமாக இருக்கிறார்கள்’ என்பர். மக்கள் பங்கு பிரித்து அயல் அயலே தனி வீட்டுக்குப் போகாமல் ஓரிடத்தில் அமைந்து வாழ்தலையும் ஒரு சமையலில் உண்பதையும் ‘கூடும் குடும்பமும்’ என்றும், ‘கூடும் குடித்தனமும்’ என்றும் கூறுவர்.
கூடும் குடித்தனமும் பற்றிக் கருதுவதற்கு நத்தை சான்றாம். கூண்டு வண்டி போலச் செல்லும் அதன் செலவும், இணைவந்து
சேருங்கால் ஒன்றாய் உருண்டு திரளும் கூடும் குடித்தனத்திற்குச் சீரிய ஒப்புமை.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.