சொல் பொருள்
கூட்டி – மிகுதியாகத் தந்து.
குறைக்க – குறைவாகத் தர
சொல் பொருள் விளக்கம்
மிகுதியாகத் தந்த ஒருவர் பின்னே குறைத்துத் தரும் நிலைக்கு வந்தால் “கூட்டிக் குறைக்கக் கொடும்பகை”யாம். இப்படிப் பழமொழியும் உண்டு. ‘நீட்டிக் குறைக்க நெடும்பகை’ என்பதும் உண்டு. அதனைக் காண்க. என்றும் தராமல் இருந்தால் புதிது இல்லையே. கிடைக்கும் என எதிர்ப்பார்த்த இடத்தில் கிடையாமை தானே ஏமாற்றம். அதுவே பகைக்குக் காரணமாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்