Skip to content

சொல் பொருள்

பெண்கள் தலைமயிர், குதிரை, கேசி என்னும் அசுரன், குதிரையின் பிடரி மயிர்

கூந்தல் = மகளிர் முடி

கூந்தல் பனை என்பது சடைசடையாகப் பாளை தொங்கும் பனையாகும்

நுங்குக் காயைச் சீவித் தள்ளும் சிதறு சிப்பியைக் கூந்தல் என்பது பனைத்தொழிலர் வழக்கு

சொல் பொருள் விளக்கம்

கூந்தல் = மகளிர் முடி. குடுமி = ஆடவர் முடி. கூந்தல் பனை என்பது சடைசடையாகப் பாளை தொங்கும் பனையாகும். நுங்குக் காயைச் சீவித் தள்ளும் சிதறு சிப்பியைக் கூந்தல் என்பது பனைத்தொழிலர் வழக்கு. சீவுதல் வழியாக ஏற்பட்ட பெயர் இது. தலை சீவுதல் போல!

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Long, flowing tresses of a woman, horse, An Asura with the name kesi slain by Lord Krishna, horse’s mane

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அறல் போல் கூந்தல் பிறை போல் திரு நுதல் – பொரு 25

(ஆற்றின்)அறல் போலும் கூந்தலினையும், பிறை போல் அழகிய நுதலினையும்,

கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல்
எரி சினம் கொன்றோய் நின் புகழ் உருவின கை – பரி 3/31,32

கூந்தல்மா என்ற குதிரை வடிவத்தோடு வந்த கேசி என்பவனின்
எரிகின்ற சினத்தைக் கொன்றவனே! உன் புகழைப் போன்றன உன் கைகள்;

மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை – கலி 103/53

தன்னை விரும்பாத கஞ்சன் முதலானோர் கட்டவிழ்த்துவிட்ட கழுத்து மயிரினைக் கொண்ட குதிரையை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “கூந்தல்”

  1. கூந்தல்
    ஒரு வழக்குச் சொல்
    இங்கு குறிப்பிட விரும்புவது

    பனையின் காய் பழமாகி
    பழத்தின் கழி உணவாக பின்னர்
    அதன் கொட்டையை(விதையை)
    கிழங்குக்காக நிலமட்டத்தின் மேற்பரப்பில்
    (ஆழமாக அல்ல) விதைப்பார்கள்.
    குறித்த காலத்தில் பனங்கிழங்கெனப் பிடுங்குவது யாவரும் அறிந்ததே
    கிழக்கிலிருந்து பிரிக்கப்படும் கொட்டையை விறகாக பயன்படுத்துவர்
    அதன் பெயர் கூந்தல் ஆகும்
    ஈழத்தின் வட பகுதியில்
    பனங்கிழங்கு
    பினாட்டு
    ஒடியல் இத்தோடு
    கூந்தலும் சிறப்பு
    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *