சொல் பொருள்
ஏவல்செய்வோர், வேட்டுவர், வழிப்பறி செய்வோர்,
சொல் பொருள் விளக்கம்
ஏவல்செய்வோர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
attendants, hunters, highway robbers
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேறு பல் உருவின் குறும் பல் கூளியர் சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – திரு 282,283 வேறு வேறாகிய பல வடிவினையுடைய குறிய பலராகிய பணியாளர், விழாவெடுத்த களத்தின் பொலிவுபெறத் தோன்றி, காய் சின முன்பின் கடுங்கண் கூளியர் ஊர் சுடு விளக்கின் தந்த ஆயமும் – மது 691,692 எரிகின்ற சினத்தையுடைத்தாகிய வலியினையும் தறுகண்மையையும் உடைய வேட்டுவ (பகைவரின்)ஊரைச் சுடுகின்ற விளக்கில் கொண்டுவந்த பசுத்திரளும், நின்னது தா என நிலை தளர மரம் பிறங்கிய நளிச் சிலம்பில் குரங்கு அன்ன புன் குறும் கூளியர் பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ – புறம் 136/11-14 உன் கைப்பொருளைத் தா என்று சொல்லி எம் நிலைகள் தளரும்படி மரங்கள் செறிந்த குளிர்ந்த மலையில் குரங்கு போல் பறித்துக்கொள்ளும் இயல்பையுடைய புல்லிய குறிய வழிப்பறிக் கள்வர்கள் பரந்து வந்து அலைக்கும் பகையை ஒருபகை என்பேனோ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்