சொல் பொருள்
மகளிர் கூந்தல், குட்டையானது,, படையின் பின் வரிசை
சொல் பொருள் விளக்கம்
மகளிர் கூந்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Woman’s hair;, that which is short, rear of an army
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின் – நற் 23/2 வாரி முடித்த கூந்தலையுடையவள் தோழியரோடு ஆடியதால் உச்சி கட்டிய கூழை ஆவின் – நற் 109/8 உச்சிப்பக்கமாகக் கயிற்றால் கட்டப்பட்ட குள்ளப்பசுவின் யாவிர் ஆயினும் கூழை தார் கொண்டு யாம் பொருதும் என்றல் ஓம்புமின் – புறம் 88/1,2 யாராயிருந்தாலும், பின்படையையும், முன்படையையும் கொண்டு யாம் அவனோடு போரிடுவோம் என்று சொல்லவேண்டாம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்