சொல் பொருள்
கெடுபிடி – நெருக்குதல்
சொல் பொருள் விளக்கம்
கெடுவாவது தவணை. இன்னகாலம் என வரையறுக்கப் பட்டது கெடுபிடியாகும். அந்நாளில் செலுத்தவேண்டியதைச் செலுத்தாவிட்டாலும், வந்து சேரவேண்டிய ஆணை நடை முறைப்படுத்தத் தவறிவிட்டாலும் பிடிப்பாணை பிறப்பிப்பது அரசாணை; நடுமன்ற ஆணையுமாம். அவ்வாணையே கெடுபிடி எனப்பட்டு, அங்கும் இங்கும் நகராமல் கட்டாயம் உட்பட்டே தீரவேண்டிய நெருக்குதலைக் குறிப்பதாகப் பொதுமக்களால் குறிக்கப்படுவது கெடுபிடியாகும். “அவன் கெடுபிடியைத் தப்ப முடியாது; இந்தக் கெடுபிடி செய்தால் என் செய்வது” என்பவை வழக்குகள்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்