சொல் பொருள்
கிளறு, தோண்டு,
அறுத்துத் தின்னு
சொல் பொருள் விளக்கம்
கிளறு, தோண்டு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dig
cut and eat
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய நில வரை நிவந்த பல உறு திரு மணி – நற் 399/4,5 வாழை மரங்களைக் கொண்ட மலைச் சரிவில், பன்றிகள் கிளறிய நிலத்தில் மேலே கிடக்கும் பலவாகிய அழகிய மணிகளின் இல் அடு கள் இன் தோப்பி பருகி மல்லல் மன்றத்து மத விடை கெண்டி மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப – பெரும் 142-144 (தமது)இல்லில் சமைத்த கள்ளுக்களில் இனிதாகிய நெல்லால் செய்த கள்ளை உண்டு, வளப்பத்தினையுடைய மன்றில் வலியையுடைய ஏற்றை அறுத்துத் தின்று, (தோலை)மடித்துப் போர்த்த வாயையுடைய மத்தளம் (தங்களுக்கு)நடுவில் முழங்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்