சொல் பொருள்
கைகொடுத்தல் – உதவுதல்
சொல் பொருள் விளக்கம்
ஏறமாட்டாதவரைக் கைதந்து மேடேற உதவுதல் உண்டு. வெள்ளத்துள் வீழ்வாரைக் கை கொடுத்துக் கரையேற்றுதல் உண்டு. அக் கைகொடுத்துத் துயர் தீர்க்கும் நடைமுறையில் இருந்து கைகொடுத்தல் என்பது, உதவுதல் பொருள் தருவதாயிற்று. “நீங்கள் கொஞ்சம் கைகொடுத்தால் மேடேறிவிடுவேன்” என்பதில் கைகொடுத்தல் என்பதன் உதவிப் பொருளும், “மேடேறி விடுவேன்” என்பதன் உதவிப்பேற்றின் விளைவும் வெளிப்படும்” கழகம் கைகொடுத்தால் நூலெழுதுதற்கே பொழுதெலாம் செலவிடுவேன்” என்று பாவாணர் குறிப்பிடுகிறார்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்