சொல் பொருள்
கைத்தூய்மை – களவு திருட்டுச் செய்யாமை
சொல் பொருள் விளக்கம்
‘கைசுத்தம்’ என்பர். கைசுத்தம் நீரால் கழுவுவதால் ஏற்படும். இது, களவு, திருட்டு எனக்கொள்ளாமையால் ஏற்படுவது. கையும் வாயும் சுத்தமாக இருந்தால் எங்கும் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்பர். கைசுத்தம் வாய் சுத்தமான ஆளா எனப்பலரிடம் கேட்டுப்பார்க்காமல் எடுபிடி வேலை வீட்டு வேலைக்குக் கூட அமர்த்துவது இல்லை. நம்ப விடவேண்டும் அன்றோ! சிலர் செய்கின்ற கருமித்தனத்தால் கையும் வாயும் தூயதாக இருக்கவேண்டும் என எண்ணுபவரும் தன்நிலைமாறிப்போக இடமாவதும் கண்கூடு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்