சொல் பொருள்
கொக்கணை என்பது பேராவூரணி வட்டாரவழக்கில் தொரட்டி என்பதையும், கருங்கல் வட்டாரத்தில் கழுத்து என்பதையும் குறிக்கின்றது. இச்சொல் கருவூர் வட்டாரத்தில் கருமித்தனம் என்னும் பொருளில் வழங்குகின்றது
சொல் பொருள் விளக்கம்
கொக்கு, கொக்கி என்பவை வளைவுப் பொருளவை. கொக்கணை என்பது பேராவூரணி வட்டாரவழக்கில் தொரட்டி என்பதையும், கருங்கல் வட்டாரத்தில் கழுத்து என்பதையும் குறிக்கின்றது. இச்சொல் கருவூர் வட்டாரத்தில் கருமித்தனம் என்னும் பொருளில் வழங்குகின்றது. வளைத்துப் பறித்தது போல் பறித்துச் செலவிடாமல் வைத்துக் கொள்ளல் குறிப்பாக இவ்வாட்சி ஏற்பட்டிருக்கக் கூடும். சொற்பிழையும்
ஆகலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்