சொல் பொருள்
கொச்சிக்காய் என்பது மிளகாயைக் குறிக்கும் வட்டார வழக்காகக் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது
சொல் பொருள் விளக்கம்
நாம் வழங்கும் மிளகாய் வருமுன், அச்சுவை தருவதாக இருந்தது மிளகு. அது மும்மருந்துள் ஒன்றாகச் சிறப்புற்றது. மிளகுச் சுவையுடைய காய், மிளகாய் எனப்பட்டது. இது வெளிநாட்டில் இருந்து கொச்சி வழியாக இறக்குமதியாகியது போலும். அதனால் கொச்சிக்காய் என்பது மிளகாயைக் குறிக்கும் வட்டார வழக்காகக் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
இலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் இது கொச்சிக்காய் என்றுதான் அழைக்கப்படுகிறது.