சொல் பொருள்
கொடித் தடுக்கல் – பாம்புதீண்டல்.
சொல் பொருள் விளக்கம்
கொடி என்பது கொடிபோல் சுருண்ட பாம்பைக் குறித்தது. பாம்பு தீண்டியது என்று சொல்லவும் கூடாது என்னும் கருத்தால் அதனைக் கொடித் தடுக்கியது என்பது நாட்டுப்புற வழக்காகும். பாம்பு நெளிந்து செல்வதும், கொடிபோல் சுருண்டு கிடப்பதும் கொடியென உவமைப்படுத்தத் தூண்டியதாம். கொடு, கொடுக்கு என்பன வளைவு என்னும் பொருள் தருவன என்பதையும் கருதுக. ‘கொடித் தடுக்கியது’ என்பதும் மங்கல வழக்காகக் கருதப்படுகிறது. கொடித் தடுக்கியவர்க்கு ‘மஞ்சள் நீர்’ (தீர்த்தம்) மந்திரித்துத் தருவார் வழிவழியாக உளர்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்