Skip to content

சொல் பொருள்

ஒருவகைக் கூத்து, ஒரு சிவ நடனம்

சொல் பொருள் விளக்கம்

ஒருவகைக் கூத்து, ஒரு சிவ நடனம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a kind of dance, a dance by Lord Siva

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

படு பறை பல இயம்ப பல் உருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடும்_கால் கோடு உயர் அகல் அல்குல்
கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ – கலி 1/5-7

ஒலிக்கின்ற பறைகள் பல முழங்க, பல்வேறு உருவங்களையும் உன்னுள்ளே அடக்கிக்கொண்டு நீ 
கொடுங்கொட்டி என்னும் கூத்தினை ஆடும்போது வளைவாக உயர்ந்த பின்பக்கத்தையும்,
கொடி போன்ற இடையும் கொண்ட இறைவி, தாளம் முடியுங் காலத்தைக் கொண்ட சீரைத் தருவாளோ?

– கைகொட்டி ஆடும் கொடுகொட்டி என்ற கூத்து – மா.இரா.உரை.

– கொடிதாகிய கொட்டி எனும் கூத்தை – நச்.உரை

– கொடுங்கொட்டி, கொடுகொட்டி என விகாரமாயிற்று. கொடுங்கொட்டி என்றார் எல்லாவற்றையும் அழித்து

– நின்று ஆடுதலின் – நச்.விளக்கம்.-

இமையவன் ஆடிய கொடுகட்டி ஆடலும் – சிலப்.கடலாடு.43

– திரிபுரம் தீ மடுத்து எரியக்கண்டு இரங்காது கைகொட்டி ஆடுதலிற் கொடுமையுடைத்தாதல் நோக்கிக்
– கொடுகொட்டி எனப் பெயர் கூறப்பட்டது. கொடுங்கொட்டி எனற்பாலது விகாரமாயிற்று
– நாட்டார் உரை.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *