Skip to content

சொல் பொருள்

அணிகலங்களுக்குப் பேர்பெற்ற பழையதோர் ஊர்

சொல் பொருள் விளக்கம்

அணிகலங்களுக்குப் பேர்பெற்ற பழையதோர் ஊர்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

An ancient town noted for the manufacture of jewellery

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொடுமணம் பட்ட வினை மாண் அரும் கலம் – பதி 74/5

கொடுமணம் என்ற ஊரில் இருக்கும் வேலைப்பாட்டினில் சிறந்த அரிய அணிகலன்களையும்,
இன்றைக்கு இந்த இடம் கொடுமணல் என்று அழைக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம், சென்னிமலையிலிருந்து மேற்கே சுமார் 15 கிமீ தூரத்திலும்,திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி யிலிருந்து சுமார் 9 கிமீ தூரத்திலும், காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆற்றின் வட கரையில், இன்றைய கொடுமணல் அமைந்துள்ளது. இதன் அமைவிடம், சங்ககாலச் சேர நாட்டின் தலைநகரமான கரூரை, மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.. இங்கே பல அகழ்வாய்வுகள் நடத்தப்பெற்றுள்ளன.

கொடுமணலில் நிகழ்ந்த அகழ்வாய்வுகளின்போது, இரும்பால் ஆன ஈட்டி முனைகள், வாள்கள், இரும்பு உருக்காலை, சிப்பி, கிளிஞ்சல் அழகொப்பனை வளையல்கள், தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட மட்பாண்டங்கள் போன்றவை பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டன. உரோமைப் பேரரசில் புழங்கிய பொன் மற்றும் வெள்ளி நாணயங்கள் பலவும் கிடைத்தன. மேலும், செப்பால் ஆன சிங்கச் சிலை மற்றும் இரும்பு உருக்கு ஆலை கண்டுபிடிக்கப்பட்டதைக் கொண்டு கொடுமணல் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்தே தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கிய நகரமாக அறியப்பட்டுள்ளது. கிமு 500க்கு முற்பட்ட தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையின் சிதிலங்களையும் பல ஆபரணங்களையும் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அண்மைய செய்தி – தினத்தந்தி, ஜூன் 10, 2020 

சென்னிமலை அருகே உள்ள கொடுமணலில் நடந்த அகழ்வாராய்ச்சியில், ஆப்கானிஸ்தானுடன் வணிகம் செய்ததற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கொடுமணல் பழங்கால மக்கள் நாகரீகத்துடன் வாழ்ந்த இடமாகும்..

இதனால் அடிக்கடி தொல்லியல் துறையினர் இங்கு அகழாய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே நடந்த ஆய்வுகளில் கீழடி, ஆதிச்சநல்லூர் போல் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான முக்கிய ஆதாரங்கள், அவர்கள் பல்வேறு தொழில் புரிந்ததற்கான சான்றுகள், முதுமக்கள் தாழி போன்றவை கிடைத்துள்ளன.

இந்த ஆய்வில் பழங்கால ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் பேசிய மொழியின் எழுத்து பொறிக்கப்பட்ட
மண் பொருட்கள் கிடைத்துள்ளன. இதேபோல் நகைகளுக்குப் பொருத்தப்படும் வண்ணக் கற்களை விற்கவும், கொடுமணலில் பட்டை தீட்டப்பட்ட ஆபரணக்கற்களை வாங்கவும் ஆப்கானிஸ்தான் நாட்டு வியாபாரிகள் வந்து சென்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இதுதவிர பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய இரும்பு பொருட்கள், பளிங்குக் கற்கள், கல்மணி, சங்குகள், வளையல் கண்ணாடிகள், மனித எலும்புகள், சரளை மண் ஓடுகள், மக்கள் வாழ்ந்த வீடுகளுக்கான தரைத்தளம், சுடுமண்ணால் ஆன நெசவுத் தொழில் பயன்பாட்டுப் பொருட்கள், இறந்த மூதாதையரைப் புதைத்துப் பாதுகாத்துவரும் முதுமக்கள் தாழி ஆகியவற்றைத் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *