சொல் பொருள்
கொடைமானம் – பழித்தல்
சொல் பொருள் விளக்கம்
கொடையும் மானமும் நற்பொருள் தரும் சொற்களே எனினும் சில இடங்களில், இவ்விரண்டையும் சேர்த்துச் சொன்னால் வசைப் பொருளாக வருதலுண்டாம். “அவள் கொடுத்த கொடைமானத்தை அள்ளி முடியாது” என்பதில் கொடைமானம் வசவாகின்றது. கொடைப் பெருமையுடையது, நேர் எதிரிடைப் பொருளில் வழங்குகின்றது. தப்பு இல்லாதவன் என்னும் பொருளில் ‘தப்பிலி’ வழங்குகின்றது. அது தப்புச் செய்பவரைக் குறித்து நிற்றல் போன்ற வழக்கு இது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்