சொல் பொருள்
கொட்டான், சிறிய ஓலைப்பெட்டி,
வைக்கோல், சாணம், விறகு முதலியவை கொட்டி வைக்கும் மனைப்பகுதி கொட்டம் எனப்பட்டது
சொல் பொருள் விளக்கம்
வைக்கோல், சாணம், விறகு முதலியவை கொட்டி வைக்கும் மனைப்பகுதி கொட்டம் எனப்பட்டது. அங்கே மாடும் கட்டும் வழக்கத்தால் மாட்டுக் கொட்டம் என்றும் வழங்கும். இனி, மாடுகள் சில தண்ணீர் குடிக்கமாட்டா. அவற்றுக்குத் தண்ணீரைப் புகட்டும் ஏனத்திற்கு (தகரத்தால் ஆயது) கொட்டம் என்பது பெயர். கொட்டுவதால் பெற்ற பெயரே அது. ‘போகணி’ என்பது மக்கள் குடிநீர்க் குவளை. இவை தென்னக வழக்குகள்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
small basket made of palm leaf
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொழும் கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும் – சிறு 166 கொழுவிய கொடியினையுடைய முசுட்டை கொட்டம்(போலும் பூவைத் தன்னிடத்தே) கொள்ளவும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்