சொல் பொருள்
கொட்டுதல் – வசைமொழிதல், கொடுத்தல்,
ஒழுக விடல், சிதறவிடல்
சொல் பொருள் விளக்கம்
கொட்டுதல் என்பது ஒரு பொருளை ஒழுக விடல், சிதறவிடல் என்னும் பொருளில் வருவது. தேள் கொட்டுதல் என்பதும் நச்சைக் கொட்டுவதாலும், மத்தளம் கொட்டுவது போல கொட்டுவதாலும் பெற்ற பெயராம். மழைக் கொட்டு கொட்டு என்று கொட்டியது என்பது ஒழுக விடுதல் அல்லது பொழிதலைக் குறித்தது. அதுபோல் வசைமொழிதலையும் வாரி வழங்குதலையும் கொட்டுதல் என்பது குறிக்கும். “கொட்டாதே கொட்டி விட்டால் அள்ள முடியாது” என்பது கூறிய வசை மாறாது என்பதைக் குறிப்பதாம். அள்ளிக் கொட்டி விட்டான் ; அவனல்லனோ வள்ளல்” என்பது கொடை.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்