சொல் பொருள்
கொத்து – அன்றன்று தவசந்தந்து பெறும் வேலை.
கூலி – ஆண்டுக்கணக்காக ஒப்பந்தஞ்செய்து தவசந்தந்து பெறும் வேலை.
சொல் பொருள் விளக்கம்
கொத்தும் கூலியும் தவசந்தந்து பெறும் வேலையே எனினும் முன்னது அற்றைக் கொத்து எனப்படும். பின்னது ஆண்டுக்கூலி எனப்படும். வேலை செய்துவிட்டு வீட்டுக்குக் போகும்போதே அதற்குரிய தவசத்தைப் பெற்றுக் கொள்வதால் அற்றைக் கொத்து என்பதே வழக்கமாயிற்று கூலிக்கு ஆண்டுப் பிறப்பு என்றும், ஆடிக்கணக்கு என்றும் இருவகையுண்டு. இப்பொழுது காசு, பணம் தருவதும் கூலியாயிற்று. கூலி ஆங்கிலத்திற்கும் சென்று ஒட்டிக் கொண்டது.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்