சொல் பொருள்
பழைய துறைமுகப் பட்டினம்
சொல் பொருள் விளக்கம்
பாண்டிநாட்டில் தாமிரபர்ணியின் சங்கமுகத்தில் அமைந்த பழைய துறைமுகப் பட்டினம். கொற்கையில் விளைந்த முத்துக்கள் பாண்டியநாட்டுக்குப் பெருஞ்செல்வத்தை ஈட்டித்தந்தன.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
An ancient port formerly at the mouth of the Tāmiraparṇi in the Pāṇdya kingdom;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – அகம் 27/9,10 கொற்கை என்ற அழகிய பெரிய துறைநகரில் விளையும் முத்தைப் போன்ற, முறுவலால் பொலிவுடன் விளங்கும் பற்கள் உள்ள சிவந்த உன் வாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்