சொல் பொருள்
முல்லை நிலம், தோட்டம்
முட்செடிகள், தூறுகள் செறிந்து மக்கள் உட்புக முடியாத நிலத்தை எரியூட்டியழித்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவர். இத்தகு நிலம் கொல்லை எனப் பொது மக்களால் வழங்கப்பட்டது
வீட்டின் பின்புறத் தோட்டம், வாயில் ஆகியவற்றைக் ‘கொல்லை’ எனல் தென்னக வழக்கு
சொல் பொருள் விளக்கம்
முட்செடிகள், தூறுகள் செறிந்து மக்கள் உட்புக முடியாத நிலத்தை எரியூட்டியழித்துப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவர். இத்தகு நிலம் கொல்லை எனப் பொது மக்களால் வழங்கப்பட்டது. வீட்டின் பின்புறத் தோட்டம், வாயில் ஆகியவற்றைக் ‘கொல்லை’ எனல் தென்னக வழக்கு. “காடு கொன்று நாடாக்கி” என்னும் மெய்க்கீர்த்தித் தொடரை நினைக்கலாம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Sylvan tract
land for cultivation
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொல்லை நெடு வழி கோபம் ஊரவும் – சிறு 168 முல்லை நிலத்து நெடிய வழியில் இந்திரகோபம் என்னும் பூச்சி ஊர்ந்து செல்லவும் கொல்லை கோவலர் எல்லி மாட்டிய பெரு மர ஒடியல் போல – நற் 289/7,8 புன்செய்க்காட்டில் கோவலர் இரவில் கொளுத்திய பெரிய மரத்துண்டைப் போன்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்