சொல் பொருள்
ஏவிவிடு, விளக்கின் திரியைப் பற்றவை, செலுத்து, ஓட்டு,
சொல் பொருள் விளக்கம்
விளக்கின் திரியைப் பற்றவை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
urge on, light the wick of a lamp, cause to go
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திங்களுள் தோன்றி இருந்த குறு முயால் எம் கேள் இதன் அகத்து உள்_வழி காட்டீமோ காட்டீயாய் ஆயின் கத நாய் கொளுவுவேன் – கலி 144/18-20 திங்களுக்குள் தோன்றியிருக்கும் சின்ன முயலே! என் காதலன் இந்த உலகத்தில் இருக்கும் இடத்தைக் காட்டுவாயா? காட்டாவிட்டால் வேட்டை நாயை உன்மீது ஏவிவிடுவேன், வள மனை பூ தொடி மகளிர் சுடர் தலை கொளுவி அந்தி அந்தணர் அயர கானவர் – குறி 223-225 செல்வம் நிறைந்த இல்லங்களில் பொலிவுள்ள வளையல் அணிந்த மகளிர் விளக்கின் திரியை ஏற்றி அந்திக்கடனை அந்தணர்(போல்) ஆற்ற ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ வேத மா பூண் வைய தேர் ஊர்ந்து – பரி 5/22,23 பிரம்மதேவன் செலுத்தும் முறையை அறிந்தவனாக, குதிரையைச் செலுத்த, வேதங்களாகிய குதிரைகள் பூட்டப்பட்ட வையகமாகிய தேரில் ஏறி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்