சொல் பொருள்
இசை, தாளம், பாட்டு, கொள்கை, கோட்பாடு, பயன், விளைவு,
சொல் பொருள் விளக்கம்
இசை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
melody, beating time (as of hands or a drum), song, will, determination, effect, result
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: யாழ் வண்டின் கொளைக்கு ஏற்ப கலவம் விரித்த மட மஞ்ஞை – பொரு 211,212 யாழ்(ஓசை போன்ற) வண்டின் இசைக்கு ஏற்ப, தோகையை விரித்த மடப்பத்தையுடைய மயில் பெரும் சமம் ததைந்த செரு புகல் மறவர் உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து பெரும் சோறு உகுத்தற்கு எறியும் கடும் சின வேந்தே நின் தழங்கு குரல் முரசே – பதி 30/41-44 பகைவரின் பெரிய போரினைச் சிதைத்துக் கெடுத்த போரை விரும்பும் மறவர்களால், இடி போன்ற நிலத்தை அதிரச் செய்யும் குரலோடு, தாள ஒலி சேர்ந்தொலிக்க, போர்வீரருக்குப் பெரிய விருந்துணவு படைப்பதற்கு அறையப்பெறுகின்றது – கடும் சினமுள்ள வேந்தனே! உன்னுடைய முழங்குகின்ற ஒலியையுடைய முரசம். படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும் – பரி 16/12 ஓங்கியடிக்கும் கண்களைக் கொண்ட இசைக்கருவிகளின் ஒலியினையும், பாட்டினையும் பயின்ற கூத்துமகளிர் ஆடுகின்ற கொளை தளராதவர் தீமை மறைப்பென்-மன் – கலி 34/17 பொருளீட்டம் என்ற கொள்கையில் தளராதவர் இழைத்த தீமையை மறைத்துக்கொண்டேன் கொடும் குழாய் தெளி என கொண்டதன் கொளை அன்றோ – கலி 132/17 வளைந்த குழைகளை அணிந்தவளே! என்னை நம்புவாயாக’ என்றதை ஏற்றுக்கொண்டதன் விளைவு அன்றோ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்