சொல் பொருள்
நெருப்பு
நெருப்புப் பற்றவைக்கப்பட்ட கோல், கொள்ளிக்கட்டை
எரிமூட்டல்
சொல் பொருள் விளக்கம்
இறந்தோர்க்குக் கொள்ளிக் கடன் செய்தல் ஆண் பிள்ளை கடமையாகக் கொண்டமையால் கொள்ளி என்பது ஆண்பிள்ளையைக் குறிப்பதாகத் தென்தமிழ் நாட்டு வழக்கு உள்ளது. “பிள்ளையும் இல்லை; கொள்ளியும் இல்லை” என்னும் மரபுத்தொடரில் பிள்ளை, கொள்ளி என்பவை பெண் பிள்ளை, ஆண்பிள்ளை குறிப்பன. கொள்ளி = எரிமூட்டல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fire
firebrand
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இளம்பிறை அன்ன விளங்கு சுடர் நேமி விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப – குறு 189/3,4 இளைய பிறையைப் போன்ற ஒளிரும் சுடரையுடைய சக்கரங்கள் வானிலிருந்து விழுகின்ற நெருப்பு அழிப்பதுபோல பசிய பயிர்களை அழிக்க கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 8 கையில் பிடித்த கொள்ளிக்கட்டையை உடையவராய், கன்னங்கள் அடித்துக்கொண்டு நடுங்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்