Skip to content

சொல் பொருள்

சூறையாடல், விலை, மிகுதி

சொல் பொருள் விளக்கம்

சூறையாடல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

plunder, Price, abundance

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தொடுதோல் அடியர் துடி பட குழீஇ
கொடு வில் எயினர் கொள்ளை உண்ட
உணவு இல் வறும் கூட்டு உள்ளகத்து இருந்து
வளை வாய் கூகை நன் பகல் குழறவும் – பட் 265-268

செருப்பு (அணிந்த) காலினையுடையராய் உடுக்கை ஒலிக்கத் திரண்டு,
கொடிய வில்லையுடைய வேடர் சூறையாடிக் கொள்ளையாக(க் கொண்டு) உண்ட
நெல் இல்லாமற்போன வெறுமையான நெற்கூட்டின் உட்புறத்தில் தங்கி,
வளைந்த அலகையுடைய கூகை உச்சிக்காலத்து(ம்) கூவவும்;

வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல் வாய் பஃறி – பட் 29,30

வெள்ளை(வெளேர் என்ற) உப்பின் விலையைச் சொல்லி(விற்று, அதற்கு மாற்றாக வாங்கிய)
நெல்லைக் கொண்டுவந்த, கெட்டியான விளிம்புகளையுடைய படகுகளை

வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை
மருப்பு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ – அகம் 267/6,7

பூனையின் பாதத்தைப் போன்ற குவிந்த அரும்பினை உடைய இலுப்பையின்
தந்தத்தினைக் கடைந்தது போன்ற மிகுதியாகவுள்ள வெள்ளிய பூக்களை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *