சொல் பொருள்
வேனிற்காலம், கோடைக்காலத்து மேலைக்காற்று, ஒரு மலை,
சொல் பொருள் விளக்கம்
வேனிற்காலம், கோடைக்காலத்து மேலைக்காற்று, ஒரு மலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Summer season, West wind at the time of the summer, a mountain
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோடை நீடினும் குறைபடல் அறியா தோள் தாழ் குளத்த – பெரும் 272,273 கோடைக்காலம் நீட்டித்து நின்றதாயினும் வற்றுதலை அறியாத, தோள்களும் அமிழும் குளங்களினுடைய வேனில் இற்றி தோயா நெடு வீழ் வழி நார் ஊசலின் கோடை தூக்கு-தொறும் துஞ்சு பிடி வருடும் அத்தம் – நற் 162/9-11 வேனிற்காலத்து இத்தி மரத்தின் நிலத்தில் தோயாத நீண்ட விழுது ஒழுகுகின்ற நாரால் கட்டப்பட்ட ஊசலைப் போலக் கோடைக்காற்று வீசித்தூக்கும்போதெல்லாம் அதன் அடியில் தூங்குகின்ற பெண்யானையின் முதுகில் வருடிவிடும் பாலை வழியில் வெள் வீ வேலி கோடை_பொருந – புறம் 205/6 வெள்ளிய பூவை உடைத்தாகிய முல்லை வேலியையுடைய கோடை என்னும் மலைக்குத் தலைவனே – திண்டுக்கல் மாவட்டத்தில் கோடைக்கானல் என்ற பெயரால் சிறப்புற்று விளங்கும் மலையே இக் கோடைமலை – ஔ.சு.து.உரை விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்