சொல் பொருள்
கொந்து என்பது திரள்வது, கூடுவது என்னும் பொருளது. ஒருவகை நீர் திரண்டு கட்டியாவதால் கோந்து என மக்களால் வழங்கப்பட்டது. கோந்து என்பது தென்னக வழக்கு.
சொல் பொருள் விளக்கம்
பழநாளில் பயின் என வழங்கப்பட்ட பசைப் பொருள் பிசின் என வழங்குகின்றது. கொந்து என்பது திரள்வது, கூடுவது என்னும் பொருளது. ஒருவகை நீர் திரண்டு கட்டியாவதால் கோந்து என மக்களால் வழங்கப்பட்டது. கோந்து என்பது தென்னக வழக்கு. ஒன்று சேர்தல் கொந்து > கோந்து. பிரிதல் கந்து > கந்தை (கிழிந்த உடை).
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்