சொல் பொருள்
பிஞ்சுத்தன்மை, ஊரார் பழிச்சொல், துன்பம், பேரொலி
சொல் பொருள் விளக்கம்
பிஞ்சுத்தன்மை, ஊரார் பழிச்சொல், துன்பம், பேரொலி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
unripedness, slander, distress, din, noise
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ் – மலை 105 பிஞ்சுத்தன்மை போன(=முற்றிய) கரிய காய்கள் ஒரு கைப்பிடிக்குள் ஏழு காய்களே கொள்ளத்தக்கனவாய் கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே – நற் 354/11 ஊரெல்லாம் உரக்கப்பேசும் பழிச்சொல்லாய் ஆகின்றது உன்னுடனான நட்பு – ஒறுப்ப ஓவலர் மறுப்ப தேறலர் தமியர் உறங்கும் கௌவை இன்றாய் இனியது கேட்டு இன்புறுக இ ஊரே – குறு 34/1-3 தாயர் முதலானோர் இடித்துரைக்கவும், தந்தை முதலானோர் மறுத்துரைக்கவும் தனியராக உறங்கும் துன்பம் இல்லாததாகி இனியது கேட்டு இன்புறுக இந்த ஊரே! முளை நிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல் குறி நீ செய்தனை என்ப அலரே குரவ நீள் சினை உறையும் பருவ மா குயில் கௌவையில் பெரிதே – ஐங் 369/2-5 மூங்கிலின் முளை போன்ற வரிசையான பற்களுடன் முறுவல் செய்யும் ஒருத்தியை நேற்று நீ குறிப்புக்காட்டி அழைத்தாய் என்று ஊரே பேசும் பேச்சு குரவ மரத்தின் நீண்ட கிளையில் தங்கியிருக்கும் வேனிற்பருவத்துக் கரிய குயில் கூவும் பேரொலியிலும் பெரிதாக இருக்கின்றது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்