சொல் பொருள்
(பெ) 1. வண்டி, 2. உரோகிணி,
சொல் பொருள் விளக்கம்
1. வண்டி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cart, The lunar asterism, represented by a cart, the fourth star
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாரி குன்றம் மழை சுமந்து அன்ன ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் – பெரும் 49,50 மழைக் காலத்து மலை முகிலைச் சுமந்தாற் போன்று, (தாளிப்பனையோலையால் செய்த)பாய் வேய்ந்த, (வழியை)அறைக்கும் விளிம்புகள் கொண்ட வண்டி அம் கண் இரு விசும்பு விளங்க திங்கள் சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து – அகம் 136/4,5 அழகிய இடம் அகன்ற பெரிய வானம் களங்கமற விளங்குதலுற, திங்களை உரோகிணி கூடிய குற்றமற்ற நன்னாள் சேர்க்கையில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்