சொல் பொருள்
நீர் உருண்டோடும் மேட்டைச் சகடை என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
நீர் உருண்டோடும் மேட்டைச் சகடை என்பது திருப்பரங்குன்ற வட்டார வழக்கு. மேட்டில் இருந்து கீழே சக்கரம் உருள்வது போல் நீரும் உருண்டு ஓடுதல் கண்டு வைக்கப்பட்ட ஒப்புப் பெயர் இது. சகடை = சக்கரம். சகடு – வண்டி. சாகாடு என்பதும் அது. சகடு, சாகாடு என்பவை தொல்பழ இலக்கிய வழக்குச் சொற்கள். “சகடக்கால் போலாம் செல்வம்” என்பது நாலடியார்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்