சொல் பொருள்
சக்கட்டி – நொண்டி
சொல் பொருள் விளக்கம்
ஒருகால், உரிய அளவினும் மற்றொருகால், சற்றே குட்டை அளவினும் இருப்பார், ஊன்றி ஊன்றி நடப்பர். அந்நடை சக்குச் சக்கென ஒலியுண்டாக நடத்தலால், அதனைச் சக்கட்டி என்பர். அச்சக்கட்டி நடை, அந்நடையுடையாரைக் குறிக்கும் நிலையில் வழக்குண்டு. அதனால் சக்கட்டி என்பதற்கு நொண்டி என்னும் பொருள் உண்டாயிற்று. “என்ன சக்கட்டி போடுகிறாய்” என நொண்டுவாரைக் கேட்பது வழக்கு.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்